< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தினத்தந்தி
|
23 Feb 2023 2:22 AM IST

நெல்லை டவுனில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை டவுன் பழையபேட்டை அழகப்பபுரம் நடுத்தெருவை சேர்ந்தவர் தட்சிணாமூா்த்தி. இவருடைய மகன் இசக்கிராஜா (வயது 28). இவர் நெல்லை டவுன் காட்சி மண்டபம் அருகே மோட்டார் சைக்கிள் ஒர்க் ஷாப் மற்றும் வாட்டர் சர்வீஸ் வைத்து உள்ளார். இவர் நேற்று மாலையில் ஒரு மோட்டார் சைக்கிளை வாட்டர் சர்வீஸ் செய்து கொண்டு இருந்தார்.

அப்போது எதிர்பாராத விதமாக மின்சாரம் தாக்கியதில் இசக்கிராஜா படுகாயம் அடைந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து நெல்லை டவுன் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

மேலும் செய்திகள்