< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
|22 Feb 2023 12:25 AM IST
பாளையங்கோட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.
பாளையங்கோட்டை கனகநாத நாயனார் தெருவை சேர்ந்தவர் கண்ணன். இவருடைய மகன் பரத் (வயது 22). இவர் தச்சநல்லூரில் உள்ள ஒரு ஒலி-ஒளி அமைப்பு நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். அந்த நிறுவனம் சார்பில் பெருமாள்புரத்தில் ஒரு புதுமனை புகு விழாவுக்கு மின்விளக்குகள் பொருத்தி உள்ளனர். நேற்று அந்த மின்விளக்குகளை சேகரித்து தச்சநல்லூருக்கு எடுத்து செல்லும் பணியில் பரத் ஈடுபட்டார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் பரத் தூக்கி வீசப்பட்டார். உடனடியாக அவரை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.