< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
ராணிப்பேட்டை
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தினத்தந்தி
|
3 Nov 2022 11:28 PM IST

சிக்கன் கடையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

நெமிலி

ராணிப்பேட்டை மாவட்டம் பனப்பாக்கம் சக்தி நகரை சேர்ந்தவர் நசீர். இவரது மகன் சதாம்உசேன் (வயது 27). இவர் பனப்பாக்கம் பஸ் நிலையம் அருகில் கோழி இறைச்சிக்கடை வைத்துள்ளார்.

நேற்று மாலை கோழியை சுத்தம் செய்ய முயன்றபோது எந்திரத்தில் ஏற்பட்ட மின் கசிவு காரணமாக எதிர்பாராத விதமாக சதாம்உசேன் மீது மின்சாரம் தாக்கியது.

இதில் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு பனப்பாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக வாலாஜா அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அவர் பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே சதாம் உசேன் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து நெமிலி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்