< Back
மாநில செய்திகள்
மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி
தேனி
மாநில செய்திகள்

மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலி

தினத்தந்தி
|
2 Nov 2022 12:15 AM IST

ஆண்டிப்பட்டி அருகே மின்சாரம் பாய்ந்து வாலிபர் பலியானார்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள அம்மச்சியாபுரம் வடக்கு தெருவை சேர்ந்த பால்பாண்டி மகன் அய்யணன் (வயது 18). கூலித்தொழிலாளி. நேற்று காலை இவர், விவசாய தோட்டத்திற்கு வேலைக்கு சென்றார். அப்போது வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்காக சென்றபோது அங்கு மின் இணைப்பு வயர்கள் சுருண்டு கிடந்ததாக தெரிகிறது. இதனை சரிசெய்த போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கி வீசப்பட்ட அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அவரது தந்தை பால்பாண்டி க.விலக்கு போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்