< Back
மாநில செய்திகள்
மின்சாரம் தாக்கி வாலிபர் பலி
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மின்சாரம் தாக்கி வாலிபர் பலி

தினத்தந்தி
|
1 Nov 2022 2:51 AM IST

பாளையங்கோட்டையில் மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

நெல்லை:

பாளையங்கோட்டை சமாதானபுரம் காந்திநகர் 2-வது தெருவை சேர்ந்தவர் நடராஜன். இவர் பாளையங்கோட்டை மண்டல அலுவலகத்தில் தூய்மை பணியாளராக உள்ளார். இவரின் மகன் பாலமூர்த்தி (வயது 20). கல்லூரி படிப்பை பாதியில் விட்டுவிட்டு கூலி வேலைக்கு சென்று வந்தார். இந்த நிலையில் பாலமூர்த்தி நேற்று காலையில் வீட்டின் மாடியில் துணிகளை காயப்போட சென்றார். அப்போது அந்த வழியாக சென்ற மின்கம்பியில் எதிர்பாராதவிதமாக ஈரத்துணி பட்டதால், பாலமூர்த்தி மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து பாளையங்கோட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்