< Back
மாநில செய்திகள்
உளுந்தூர்பேட்டை அருகேமின்சாரம் தாக்கி வாலிபர் பலிசாமி ஊர்வலத்தின்போது பரிதாபம்
கள்ளக்குறிச்சி
மாநில செய்திகள்

உளுந்தூர்பேட்டை அருகேமின்சாரம் தாக்கி வாலிபர் பலிசாமி ஊர்வலத்தின்போது பரிதாபம்

தினத்தந்தி
|
14 Aug 2023 12:15 AM IST

உளுந்தூர்பேட்டை அருகே சாமி ஊர்வலத்தின்போது மின்சாரம் தாக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

உளுந்தூர்பேட்டை,

உளுந்தூர்பேட்டை அருகே உள்ள கிளாப்பாளையம் கிராமத்தில் அய்யனார் கோவில் திருவிழா நடைபெற்று வருகிறது. நேற்று முன்தினம் இரவு விழாவையொட்டி மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் சாமி வீதிஉலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது ஊர்வலத்தில் சென்ற அதேஊரை சேர்ந்த கிருஷ்ணமூர்த்தி மகன் பச்சையப்பன்(வயது 23) என்பவர் சாமி வீதிஉலா சென்ற வாகனத்தை கடந்தபோது, எதிர்பாராதவிதமாக அவரை மின்சாரம் தாக்கியது. இதில் பச்சையப்பன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். உளுந்தூர்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்