< Back
மாநில செய்திகள்
கொள்ளுமேடு கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபர் சிறையில் அடைப்பு - 8 பவுன் நகை பறிமுதல்
திருவள்ளூர்
மாநில செய்திகள்

கொள்ளுமேடு கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபர் சிறையில் அடைப்பு - 8 பவுன் நகை பறிமுதல்

தினத்தந்தி
|
10 Sep 2022 9:09 AM GMT

கொள்ளுமேடு கிராமத்தில் வீடு புகுந்து கொள்ளையடித்த வாலிபர் சிறையில் அடைக்கப்பட்டார். அவரிடம் இருந்து 8 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது.

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் ஒன்றியம் கொள்ளுமேடு கிராமம், பெருமாள் கோவில் தெருவில் வசித்து வருபவர் அம்பிகா. இவரது வீட்டில் கடந்த மாதம் 8-ந்தேதி மர்ம நபர்கள் உள்ளே புகுந்து பீரோவை உடைத்து அதில் இருந்த 8 பவுன் தங்க நகைகள், அரை கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.15 ஆயிரம் உள்ளிட்டவைகளை கொள்ளையடித்து சென்றனர். இது குறித்து அம்பிகா ஆரணி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

ஊத்துக்கோட்டை துணை போலீஸ் சூப்பிரண்டு சாரதி உத்தரவின் பேரில் பெரியபாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் பிரதாபன் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று பெரியபாளையம் அருகே உள்ள பனையஞ்சேரி பெரியகாலனி பெருமாள் கோவில் தெருவில் வசித்து வரும் பெயிண்டர் பிரகாஷ் (வயது 30) மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவரை போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று பல்வேறு கோணங்களில் விசாரணை செய்தனர்.

அம்பிகா வீட்டில் திருடியதை பிரகாஷ் ஒப்புக்கொண்டார். அவரை போலீசார் கைது செய்து அவர் கொடுத்த தகவலின் பேரில் 8 பவுன் தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பின்னர் பிரகாஷை பொன்னேரி முதல் நிலை குற்றவியல் கோர்ட்டு மாஜிஸ்திரேட்டு முன்னிலையில் ஆஜர் செய்தனர். பின்னர் பிரகாஷை பொன்னேரி கிளை சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்