திருவள்ளூர்
ஆர்.கே.பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|ஆர்.கே.பேட்டையில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மகன் தமிழ்ச்செல்வன் (வயது 23). இவர் தனது பெற்றோருடன் சண்டை போட்டு விட்டு அவர்களிடம் இருந்து கோபித்துக் கொண்டு திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு தாலுகா அடுத்த ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றியம் ஆர்.பி.கண்டிகையில் உள்ள தனது பாட்டி தெய்வானை வீட்டிற்கு வந்தார். நேற்று முன்தினம் இரவு தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்து விட்டு அவர் வீட்டில் தங்கினார்.
நள்ளிரவில் பாட்டி வீட்டின் அருகில் இருந்த மரத்தில் தமிழ்ச்செல்வன் கயிற்றால் தூக்குப்போட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் கிடைத்ததும் ஆர்.கே.பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சோளிங்கர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆர்.கே.பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.