< Back
மாநில செய்திகள்
கோவில்பட்டியில்வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை
தூத்துக்குடி
மாநில செய்திகள்

கோவில்பட்டியில்வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை

தினத்தந்தி
|
7 Sept 2023 12:15 AM IST

கோவில்பட்டியில்வாலிபர் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார்.

கோவில்பட்டி:

கோவில்பட்டி வ.உ.சி. நகர் முதல் தெருவை சேர்ந்த ராமசாமி மகன் மகேஷ்ராஜா (வயது 25). கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் காலையில் இவரது தாய் செல்வமணி கூலி வேலைக்கு சென்று விட்டார். வேலை முடிந்து மாலையில் அவர் வீடு திரும்பியபோது மகேஷ்ராஜா தூக்கில்பிணமாக தொங்கியுள்ளார். இந்த சம்பவம் பற்றி செல்வமணி அளித்த புகாரின் பேரில் மேற்கு பேலீஸ் இன்ஸ்பெக்டர் கிங்ஸ்லி தேவானந்த், சப்- இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் மற்றும் போலீசார் சம்பவ வீட்டிற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து மேற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், அவர் தற்கொலை செய்து கொண்டது தெரிய வந்தது. அதற்கான காரணம் குறித்து போலீார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்