< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பு - 3 சிறுவர்கள் உள்பட 4 பேர் கைது
|4 July 2022 8:01 AM IST
மெரினாவில் வாலிபரை அரிவாளால் வெட்டி செல்போன் பறிப்பில் ஈடுப்பட்ட 3 சிறுவர்கள் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வியாசர்பாடியைச் சேர்ந்தவர் இளமாறன் (வயது 23). புகைப்படக்கலைஞராக தொழில் செய்து வருகிறார். இவர் நேற்று காலை மெரினாவுக்கு நண்பர்களுடன் வந்தார். அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல், இளமாறனிடம் தகராறு செய்தனர். மேலும் அவரை அரிவாளால் வெட்டி இளமாறனின் செல்போனை பறித்துச்சென்று விட்டனர். இதில் காயம் அடைந்த இளமாறன் ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக மெரினா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். உடனடியாக களத்தில் இறங்கிய போலீசார், செல்போன் பறித்த கும்பலைச் சேர்ந்த ஐஸ்-அவுஸ் பகுதியைச்சேர்ந்த 3 சிறுவர்கள் மற்றும் ஆனந்த் ஆகிய 4 பேரை கைது செய்தனர்.