< Back
மாநில செய்திகள்
வயல்வெளியில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்
மாநில செய்திகள்

வயல்வெளியில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழப்பு - உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம்

தினத்தந்தி
|
17 March 2024 11:46 PM IST

ராமநாதபுரம் அருகே வயல்வெளியில் இளைஞர் மர்மமான முறையில் உயிரிழந்த சம்பவத்தில் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் மாவட்டம் திருஉத்திரகோசமங்கை அருகே உள்ள சுமைதாங்கி கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன். மைக் செட் வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்த அவர், வீட்டிலிருந்து வெளியே சென்றிருந்த நிலையில், அதே பகுதியில் உள்ள வயல்வெளியில் மர்மமான முறையில் உயிரிழந்து கிடந்தார்.

தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த நிலையில், இறப்பில் சந்தேகம் இருப்பதாகக் கூறி, கொலையாளிகளை பிடிக்கும் வரை உடலை வாங்கமாட்டோம் என உயிரிழந்த பாலமுருகனின் உறவினர்கள் மருத்துவமனை வளாகத்தில் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்