< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
பட்டாபிராமில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பலி
|29 July 2022 10:09 AM IST
பட்டாபிராமில் எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு வாலிபர் பரிதாபமாக உயிரிழந்தார்.
ஆவடியை அடுத்த பட்டாபிராம் காந்தி நகரைச் சேர்ந்தவர் கிறிஸ்டோபர் (வயது 28). இவர், அம்பத்தூரில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்தார். கிறிஸ்டோபர் வேலை முடிந்து ரெயிலில் அம்பத்தூரில் இருந்து பட்டாபிராம் வந்து இறங்கினார். பின்னர் வீட்டுக்கு செல்வதற்காக தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்றார். அப்போது சென்னை நோக்கி வந்த எக்ஸ்பிரஸ் ரெயிலில் அடிபட்டு கிறிஸ்டோபர் அதே இடத்தில் பரிதாபமாக உயிரிழந்தார்.
அதேபோல் அண்ணனூர்- திருமுல்லைவாயில் ரெயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடந்து செல்ல முயன்ற 30 வயது மதிக்கத்தக்க வாலிபர், சென்னை நோக்கி வந்த மின்சார ரெயிலில் அடிபட்டு உயிரிழந்தார். அவர் யார்?, எந்த ஊர்? என்பது தெரியவில்லை.
இந்த 2 சம்பவங்கள் குறித்தும் ஆவடி ரெயில்வே போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.