< Back
மாநில செய்திகள்
கல்பாக்கம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கல்பாக்கம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
25 Aug 2022 2:41 PM IST

கல்பாக்கம் அருகே கடன் தொல்லையால் வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

செங்கல்பட்டு மாவட்டம் கல்பாக்கம் அடுத்த புதுபட்டினம் பகுதியில் வசித்து வந்தவர் பன்னீர்செல்வம். இவர் சமீபத்தில் இறந்துவிட்டார். இவருக்கு ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். மகன் சுந்தரமூர்த்தி (வயது 27) அதே பகுதியில் உள்ள கடையில் கணக்கு எழுதும் பணிகளை செய்து வந்தார்.

மேலும் அவருடைய குடும்ப செலவுக்காக பல்வேறு இடங்களில் கடன் வாங்கியதாகவும் சில மாதங்களாக வேலையில்லாத காரணத்தால் கடனை திருப்பி செலுத்த முடியாத நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அவர் ஏழுதிய கடிதம் சிக்கியது. அதில் தனது சாவுக்கு யாரும் காரணம் இல்லை. நான் வாங்கிய கடன் தொகையை என்னால் திருப்பி தர முடியாது. இதனால் இந்த முடிவை எடுக்கிறேன் என்று எழுதி வைத்துவிட்டு விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட தாக கூறப்படுகிறது.

இது குறித்து தகவல் அறிந்து வந்த கல்பாக்கம் போலீசார் சுந்தரமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்