< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
தஞ்சாவூர்
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
2 April 2023 1:31 AM IST

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள கூத்தூர் காலனி தெருவை சேர்ந்தவர் பிரவீன் குமார் (வயது22). இவர் வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்காக சிகிச்சை பெற்று மருந்து, மாத்திரைகள் சாப்பிட்டு வந்தார். ஆனாலும் வயிற்றுவலி குணமாகவில்லை. இதனால் மனமுடைந்த பிரவீன்குமார் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து பிரவீன்குமார் தந்தை தங்கராஜ் (47) திருக்காட்டுப்பள்ளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் திருக்காட்டுப்பள்ளி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்