< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
கடலூர்
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
4 Dec 2022 12:15 AM IST

விருத்தாசலத்தில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அடுத்த மணக்கொல்லை கிராமத்தை சேர்ந்தவர் அருணாசலம். இவரது மகன் தேன்குமார் (வயது 23). இவர் நேற்று முன்தினம் தே.கோபுராபுரம் கிராமத்தை சேர்ந்த இளவரசன் என்பவரது நிலத்தில் உள்ள மாட்டு கொட்டகையில், தூக்குப்போட்டு கொண்டார். அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், தேன்குமார் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்த புகாரின் பேரில் விருத்தாசலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தேன்குமார் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்