< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
மயிலாடுதுறை
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

மணல்மேடு அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.

மணல்மேடு:

மணல்மேடு அருகே கிடாதலைமேடு கிராமம் வடக்கு தெருவை சேர்ந்த கணேசன் மகன் தினேஷ் (வயது 32). இவருக்கு திருமணமாகி 1½ ஆண்டுகள் ஆகின்றது. இந்த நிலையில் கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, தினேசின் மனைவி கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அவரது தாய் வீட்டுக்கு சென்றதாக கூறப்படுகிறது. இதனால் தினேஷ் மன உளைச்சலில் இருந்து வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில் கடந்த 18-ந் தேதி மதியம் வீட்டில் உள்ள அறைக்குள் சென்று கதவை அடைத்துக் கொண்ட தினேஷ் நீண்ட நேரம் ஆகியும் திறக்கவில்லை. இதில் சந்தேகம் அடைந்த அவரது குடும்பத்தினர் கதவை உடைத்துக் கொண்டு உள்ளே சென்று பார்த்தனர். அங்கு தினேஷ் தூக்கில் பிணமாக தொங்கியதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இது குறித்து மணல்மேடு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தினேஷ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மயிலாடுதுறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் தொடர்பாக போலீஸ் இன்ஸ்பெக்டர் மாரிமுத்து மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்