< Back
மாநில செய்திகள்
தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
திருவண்ணாமலை
மாநில செய்திகள்

தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
13 July 2023 11:04 PM IST

வாணாபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாணாபுரம்

வாணாபுரம் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டியதாக 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

வாலிபர்

திருவண்ணாமலை மாவட்டம் வாணாபுரம் அருகே உள்ள சே.கூடலூர் சமத்துவபுரத்தைச் சேர்ந்த வெங்கட்ராமன் என்பவரின் மகன் சஞ்சய் (வயது 23), இவர் டிப்ளமோ என்ஜினீயரிங் படித்து முடித்துவிட்டு ஓசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் சஞ்சய் விடுமுறையில் சே.கூடலூர் சமத்துவபுரத்திற்கு வந்தார். மேலும் சஞ்சய் கடந்த 3 ஆண்டுகளாக வாக்கிலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணை காதலித்து வந்துள்ளார்.

அந்த பெண்ணுக்கு திருமணம் நடைபெற்று, தற்போது கணவருடன் வாழாமல் தாய் வீட்டில் வசித்து வருவதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் அந்த பெண்ணின் செல்போன் எண்ணிற்கு சஞ்சயின் புகைப்படம் வந்ததாக கூறி அவரது பெற்றோர் சஞ்சயை திட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து போலீசார் இருதரப்பினரையும் அழைத்து அறிவுரை கூறியதாக கூறப்படுகிறது.

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மனஉளைச்சல் அடைந்த சஞ்சய் வீட்டில் யாரும் இல்லாதபோது தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து தகவல் அறிந்த வாணாபுரம் போலீசார் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2 பேர் கைது

மேலும் போலீஸ் விசாரணையில் சஞ்சய் சட்டை பாக்கெட்டில் கடிதம் இருந்தது. அந்த கடிதத்தில் எனது சாவுக்கு எட்டியான் (62), கச்சிராப்பட்டு பகுதியைச் சேர்ந்த கலைராஜா (45) இருவரும் தான் காரணம் என்று எழுதி உள்ளதாக கூறப்படுகிறது.

இதனையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Tags :
மேலும் செய்திகள்