< Back
மாநில செய்திகள்
அணையில் குதித்து வாலிபர் தற்கொலை
நீலகிரி
மாநில செய்திகள்

அணையில் குதித்து வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
14 Oct 2023 2:30 AM IST

ஊட்டி அருகே காதல் தோல்வியால் அணையில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஊட்டி அருகே காதல் தோல்வியால் அணையில் குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.

ஐ.டி. ஊழியர்

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே வெலிங்டன் ஜெயா நகரை சேர்ந்தவர் பாரூக் பாட்ஷா. இவருடைய மகன் அக்கீம் (வயது 24). இவர் ஊட்டியில் உள்ள ஐ.டி. நிறுவனத்தில் ஊழியராக பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் அக்கீம் தன்னுடன் பணியாற்றும் இளம்பெண் ஒருவரை ஒருதலையாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் அந்த பெண்ணுக்கு பெற்றோர் வேறு மாப்பிள்ளை பார்த்து நிச்சயதார்த்தம் நடத்தி முடித்தனர்.

தற்கொலை

இதை அறிந்த அக்கீம் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்தார். சம்பவத்தன்று மாலையில் அந்த பெண்ணின் வீட்டில் உள்ள பெரியவர்களிடம் தனது காதல் பற்றி பேசுவதற்காக அக்கீம் சென்றார். ஆனால் பெண்ணின் குடும்பத்தினர் திருமணத்துக்கு நகை மற்றும் துணி எடுப்பதற்காக கோவைக்கு சென்று விட்டனர். அவர்களிடம் பேச முடியாததால், விரக்தி அடைந்த அக்கீம், ஊட்டி அருகே உள்ள மார்லிமந்து அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்டார்.

உடல் மீட்பு

இது குறித்த தகவலின் பேரில் புதுமந்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) சரஸ்வதி, சப்-இன்ஸ்பெக்டர் குத்தாலிங்கம் தலைமையிலான போலீசார் விரைந்து சென்று, அணையில் மிதந்த அக்கீமின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காதல் தோல்வியால் ஐ.டி. ஊழியர் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்