சென்னை
அமைந்தகரையில் ஆஸ்பத்திரியின் 9-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை
|அமைந்தகரையில் ஆஸ்பத்திரியின் 9-வது மாடியில் இருந்து குதித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்தவர் நீலேஷ்குமார் சர்மா(வயது 31). இவர், சென்னை சூளைமேடு, காமராஜர் நகர், 3-வது தெருவில் வசித்து கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் வங்கியில் பணியாற்றி வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு அமைந்தகரை பகுதியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் உடல் நலக்குறைவால் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். அவருக்கு நேற்று டைப்பாய்டு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.
இதனால் அந்த ஆஸ்பத்திரியின் 9-வது மாடியில் சிகிச்சை பெற்று வந்த நீலேஷ்குமார், நேற்று இரவு திடீரென அவர் சிகிச்சை பெற்று வந்த அறையின் ஜன்னல் கதவை திறந்து அங்கிருந்து கீழே குதித்தார். இதில் கீழே விழுந்ததில் தலை சிதறிய நிலையில் அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அமைந்தகரை போலீசார் வழக்குப்பதிவு செய்து உடல் நலக்குறைவு காரணமாக அவர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்ற கோணத்தில் விசாரித்து வருகின்றனர்.