< Back
மாநில செய்திகள்
குன்றத்தூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
காஞ்சிபுரம்
மாநில செய்திகள்

குன்றத்தூர் அருகே தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை

தினத்தந்தி
|
25 May 2022 8:41 PM IST

குன்றத்தூர் அருகே வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குன்றத்தூர் அடுத்த இரண்டாம் கட்டளை பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் ராகுல் (வயது 24), கோவூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று மதியம் சாப்பிட வீட்டுக்கு வந்தவர் அதன் பின்பு நிறுவனத்துக்கு வராததால் அவரது தம்பி வீட்டுக்கு வந்து பார்த்தார். அப்போது சமையலறையில் ராகுல் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து குன்றத்தூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் ராகுல் உடலை பிரத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசுஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீஸ் விசாரணையில் ராகுல் காதலித்த பெண் வேறு ஒருவருடன் பேசியதாக கூறப்படுகிறது.

அதனால் ஏற்பட்ட மனஉளைச்சலில் தற்கொலை செய்துள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும் மேலும் வேறு காரணங்கள் ஏதாவது உள்ளதா என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

மேலும் செய்திகள்