< Back
மாநில செய்திகள்
செங்கல்பட்டு
மாநில செய்திகள்
காட்டாங்கொளத்தூரில் வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
|30 Oct 2022 5:34 PM IST
காட்டாங்கொளத்தூரில் வாலிபர் வயிற்று வலி காரணமாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் நகராட்சிக்குட்பட்ட காட்டாங்கொளத்தூர் மாதா கோவில் 1-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் நவீன் (வயது 25), இவருக்கு அடிக்கடி வயிற்று வலி வரும் என்று கூறப்படுகிறது. இதனால் மனமுடைந்த நவீன் நேற்று முன்தினம் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று நவீன் உடலை கைப்பற்றி பிேரத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். போலீசார் தொடர்ந்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.