< Back
மாநில செய்திகள்
கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது - குஜராத் மாநில போலீசார் அதிரடி
சென்னை
மாநில செய்திகள்

கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளுடன் வாலிபர் கைது - குஜராத் மாநில போலீசார் அதிரடி

தினத்தந்தி
|
22 April 2023 1:18 PM IST

சென்னை கொடுங்கையூரில் ரூ.7 லட்சம் கள்ளநோட்டுகளுடன் இருந்த வாலிபரை குஜராத் மாநில போலீசார் கைது செய்தனர்.

சென்னை கொடுங்கையூர் சேலைவாயல் தென்றல் நகரைச் சேர்ந்தவர் சூர்யா (வயது 36). இவர், குஜராத் மாநிலம் சூரத் மாவட்டம் அம்ரோரி போலீஸ் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் கள்ள நோட்டுகளை மாற்ற முயன்றார். அவரை குஜராத் போலீசார் தேடி வந்தனர்.

இந்தநிலையில் சூர்யா, சென்னை கொடுங்கையூரில் பதுங்கி இருப்பதாக வந்த தகவலின்பேரில் சென்னை வந்த குஜராத் மாநில போலீசார், கொடுங்கையூர் போலீஸ் உதவியுடன் நேற்று சூர்யாவை மடக்கிப்பிடித்து கைது செய்தனர்.

அவரிடம் விசாரணை நடத்தியதில் கள்ளநோட்டுகள் அச்சடிக்க பயன்படுத்திய எந்திரம் மற்றும் கள்ள நோட்டுகளை மணலி கோவிந்தசாமி தெருவில் உள்ள தனது சகோதரி வீட்டில் பதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்தார்.

இதையடுத்து குஜராத் மற்றும் கொடுங்கையூர் போலீசார் இணைந்து மணலியில் உள்ள அவரது சகோதரி வீட்டில் இருந்து ரூ.7 லட்சம் மதிப்புள்ள 500 ரூபாய் கள்ள நோட்டுகள் மற்றும் கள்ளநோட்டுகளை அச்சடிக்க பயன்படுத்திய 2 பிரிண்டிங் எந்திரங்களை பறிமுதல் செய்தனர்.

மேலும் சூர்யா வேறு எங்கெல்லாம் கள்ளநோட்டுகளை புழக்கத்தில் விட்டுள்ளார். அவருக்கு யார், யார் உடந்தை? என குஜராத் மாநில போலீசார் சூர்யாவிடம் கிடுக்கு பிடி விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்