< Back
மாநில செய்திகள்
திருநெல்வேலி
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
|15 Feb 2023 3:06 AM IST
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
அம்பை:
அம்பை பகுதியை சேர்ந்த ஒரு சிறுமியிடம், பணகுடி பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்த சாகிர் உசேன் மகன் சேக் முகமது ஆசிக் (வயது 30) என்பவர் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி ஏமாற்றி உள்ளார். இதுகுறித்து சிறுமியின் பெற்றோர், அம்பை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன் பேரில் அம்பை உதவி சூப்பிரண்டு பல்வீர் சிங் விசாரணை நடத்தி போக்சோ சட்டத்தின் கீழ் சேக் முகமது ஆசிக்கை கைது செய்தார். இவர் மீது நெல்லை மாவட்டத்தில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.