< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது
|24 Aug 2022 10:00 PM IST
போக்சோ சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஆலங்குளம்:
பாவூர்சத்திரம் சிவகாமிபுரத்தைச் சேர்ந்தவர் பரமசிவன் மகன் பிரபாகரன் (வயது 25). பூ கட்டும் தொழிலாளியான இவர் 16 வயது சிறுமியிடம் ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரம் செய்ததில் சிறுமி கர்ப்பம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து சிறுமி தனது பெற்றோரிடம் கூறியதையடுத்து இரு வீட்டார் சம்மதத்துடன் சிறுமிக்கும், பிரபாகரனுக்கும் திருமண ஏற்பாடுகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிறுமியின் திருமணம் குறித்து பெண்கள் உதவி மையத்திற்கு சமூக ஆர்வலர் ஒருவர் அளித்த புகாரின் பேரில், ஆலங்குளம் அனைத்து மகளிர் காவல் போலீசார் போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து பிரபாகரனை கைது செய்தனர்.