< Back
மாநில செய்திகள்
தென்காசி
மாநில செய்திகள்
வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
|26 July 2022 9:32 PM IST
சங்கரன்கோவில் அருகே சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
சங்கரன்கோவில்:
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள மீன்துள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மாடசாமி மகன் செல்வகுமார் (வயது 23). இவரும், 10-ம் வகுப்பு படிப்பை பாதியில் நிறுத்தி விட்டு வீட்டில் இருக்கும் 15 வயது சிறுமியும் ஒரு ஆண்டாக காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இருவரும் நெருங்கி பழகியதால் அந்த சிறுமி கர்ப்பமானார். இதுபற்றி அறிந்ததும் சிறுமியின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இதுகுறித்து சங்கரன்கோவில் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் செல்வகுமாரை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.