< Back
மாநில செய்திகள்
திண்டுக்கல்
மாநில செய்திகள்
போக்சோவில் வாலிபர் கைது
|6 Oct 2023 1:45 AM IST
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
நத்தத்தை சேர்ந்தவர் தர்மராஜ் (வயது 22). இவர் கடந்த சில தினங் களுக்கு முன்பு 16 வயது சிறுமியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி திருப்பூருக்கு அழைத்து சென்று விட்டார். அங்கு அவர், அந்த சிறுமிக்கு பாலியல் ெதால்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து சிறுமியின் தாய் நத்தம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் திருப்பூர் சென்று சிறுமியை மீட்டனர். பின்னர் ேபாக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்து தர்மராஜை கைது செய்தனர்.