< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
கும்மிடிப்பூண்டியில் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
|22 Sept 2022 8:16 PM IST
கும்மிடிப்பூண்டியில் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி பஜாரையொட்டிய கன்னியம்மன் கோவில் ரெயில்வே மேம்பாலம் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த டிராக்டர்களில் இருந்து கடந்த வாரம் பேட்டரிகள் திருட்டு போனது. இது குறித்து கும்மிடிப்பூண்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த வழக்குகள் தொடர்பாக பெரிய சோழியம்பாக்கம் கிராமத்தை சேர்ந்த சத்யா (வயது 22) என்பவரை போலீசார் கைது செய்தனர்.