< Back
மாநில செய்திகள்
திருவண்ணாமலை
மாநில செய்திகள்
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
|27 Oct 2023 12:15 AM IST
குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
திருவண்ணாமலை மாவட்டம் வெறையூர் அருகே திருவாணைமுகம் கிராமத்தை சேர்ந்தவர் ஆறுமுகம். இவரது மகன் சதீஷ்குமார். (வயது 22).
இதே பகுதியில் நடைபெற்ற கோவில் திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் சதீஷ்குமார் ஒருவரை கத்தியால் வெட்டி கொலை செய்ய முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக வெறையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சதீஷ்குமாரை கைது செய்தனர்.
இந்த நிலையில் சதீஷ்குமார் தொடர் குற்ற செயல்களில் ஈடுபடுவதை தடுப்பதற்காக அவரை குண்டர் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் என மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தார்.
அதன் பேரில் சதீஷ்குமாரை, குண்டர் சட்டத்தில் கைது செய்ய கலெக்டர் உத்தரவிட்டார்.