< Back
மாநில செய்திகள்
கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் வாலிபர் கைது
செங்கல்பட்டு
மாநில செய்திகள்

கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் வாலிபர் கைது

தினத்தந்தி
|
24 Aug 2023 4:20 PM IST

கூடுவாஞ்சேரியில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் அடிக்கடி மோட்டார் சைக்கிள்கள் திருட்டு போகும் சம்பவங்கள் நடைபெற்று வந்தன. இது குறித்து கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் மோட்டார் சைக்கிள் திருடிய வழக்கில் மதுராந்தகம் பகுதியை சேர்ந்த தினேஷ்குமார் (வயது 30), என்பவரை கூடுவாஞ்சேரி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்து செங்கல்பட்டு கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

மேலும் செய்திகள்