< Back
மாநில செய்திகள்
நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது

தினத்தந்தி
|
20 Oct 2023 12:29 AM IST

திசையன்விளை அருகே நகை திருட்டு வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.

திசையன்விளை:

திசையன்விளை அருகே வாழைதோட்டம் கிராமத்தை சேர்ந்தவர் மைக்கிள் ரீகன் (வயது 40). இவரது மனைவிக்கு சொந்தமான 18½ பவுன் நகைகள் திருட்டு போனது. இதுகுறித்து அவர் திசையன்விளை போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் அதே ஊரைச் சேர்ந்த சிலுவை அந்தோணி மகன் ஸ்டீபன் மங்கள் ராஜ் (28) என்பவர் வீட்டில் ஆள் இல்லாதபோது நகைகளை திருடி திசையன்விளையில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் அடகு வைத்து இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜ், ஸ்டீபன் மங்கள் ராஜை கைது செய்தார். அவர் கொடுத்த தகவல் பேரில் நிதி நிறுவனத்தில் இருந்து நகைகளை போலீசார் மீட்டனர். ரம்மதபுரத்தை சோந்த பிரின்ஸ் என்பவரிடம் இருந்து ஸ்டீபன் மங்கள்ராஜ் பறித்து சென்ற மோதிரமும் மீட்கப்பட்டது.

மேலும் செய்திகள்