< Back
மாநில செய்திகள்
நகைகள் திருட்டு வழக்கில் வாலிபர் கைது
புதுக்கோட்டை
மாநில செய்திகள்

நகைகள் திருட்டு வழக்கில் வாலிபர் கைது

தினத்தந்தி
|
13 Oct 2023 12:57 AM IST

நகைகள் திருட்டு வழக்கில் வாலிபரை போலீசார் கைது செய்து 41 பவுனை பறிமுதல் செய்தனர். தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு பாராட்டினார்.

நகைகள் திருட்டு

புதுக்கோட்டை மாவட்டம், நமணசமுத்திரத்தில் ராஜேந்திரன் என்பவரது வீட்டில் நகைகள் கடந்த செப்டம்பர் மாதம் திருட்டு போனது. இதேபோல கடந்த ஜூன் மாதம் கீழாநெல்லிக்கோட்டை அரியநாயகி அம்மன் கோவில் கும்பாபிஷேகத்தில் பக்தரிடம் நகை காணாமல் போனது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

மேலும் மேற்கண்ட திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டவரை பிடிக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே உத்தரவின் பேரில் பொன்னமராவதி உட்கோட்ட தனிப்படையின் சப்-இன்ஸ்பெக்டர் அன்பழகன் தலைமையில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் மேற்கண்ட திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட நச்சாந்துபட்டியை சேர்ந்த கார்த்திக் (வயது 29) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 41 பவுன் நகைகளை பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் குற்றவாளியை பிடித்த தனிப்படை போலீசாரை போலீஸ் சூப்பிரண்டு வந்திதா பாண்டே நேரில் அழைத்து பாராட்டினார்.

மேலும் செய்திகள்