< Back
மாநில செய்திகள்
தூத்துக்குடி
மாநில செய்திகள்
தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது
|11 Oct 2022 12:15 AM IST
தூத்துக்குடியில் தொழிலாளியிடம் பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
தூத்துக்குடி ஊரக துணை போலீஸ் சூப்பிரண்டு (பொறுப்பு) சம்பத் மேற்பார்வையில் சிப்காட் இன்ஸ்பெக்டர் சண்முகம் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சங்கர் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது சோரீஸ்புரம்-மடத்தூர் ரோட்டில் சந்தேகப்படும்படியாக நின்று கொண்டு இருந்த, தூத்துக்குடி ராஜகோபால் நகரை சேர்ந்த நல்லகண்ணு மகன் இசக்கிமுத்து என்ற ராஜா (28) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் அந்த பகுதியில் வந்து கொண்டிருந்த தொழிலாளி ஒருவரை வழிமறித்து பணம் கேட்டு கத்தியை காட்டி கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் இசக்கிமுத்து என்ற ராஜாவை கைது செய்தனர்.