< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வேப்பேரியில் பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த வாலிபர் கைது
|14 Jan 2023 9:54 AM IST
வேப்பேரியில் பெண்ணை செல்போனில் ஆபாசமாக படம் பிடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வேப்பேரியில் உள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் பணி செய்யும் 32 வயதான பெண், நேற்று பணியின்போது நிறுவனத்தில் உள்ள கழிவறைக்கு சென்றார். அப்போது ஜன்னல் வழியாக அவரை, மர்மநபர் ஒருவர் செல்போனில் ஆபாசமாக படம் பிடித்தார்.
இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த பெண், கூச்சல் போட்டார். அவரது சத்தம் கேட்டு சகஊழியர்கள் ஓடிவந்தனர். அவரை செல்போனில் ஆபாசமாக படம்பிடித்தது அவருடன் பணியாற்றும் சக ஊழியரான பாலாஜி (24) என்பது தெரியவந்தது.
இதுபற்றி அந்த பெண் கொடுத்த புகாரின்பேரில் வேப்பேரி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலாஜியை கைது செய்தனர். இன்னும் திருமணம் ஆகாத பாலாஜி, திருமணம் ஆன அந்த பெண் மீது ஆசைபட்டதாக தெரிகிறது. கைதான பாலாஜியிடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.