< Back
மாநில செய்திகள்
வீட்டில் பொருட்களை திருடிய வாலிபர் கைது
திருச்சி
மாநில செய்திகள்

வீட்டில் பொருட்களை திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
24 Feb 2023 2:15 AM IST

வீட்டில் பொருட்களை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

துவரங்குறிச்சி:

துவரங்குறிச்சியை அடுத்த கஞ்சநாயக்கன்பட்டியை சேர்ந்தவர் பழனிசாமி(வயது 52). இவர் சம்பவத்தன்று மனைவியுடன் தோட்டத்தில் உள்ள வீட்டிற்கு சென்று விட்டார். கஞ்சநாயக்கன்பட்டியில் உள்ள வீட்டில் அவரது 2 மகன்கள் மற்றும் அதே பகுதியை சேர்ந்த மருதை(32) ஆகியோர் இருந்தனர். இரவில் தூங்கிவிட்டு காலையில் எழுந்து பார்த்தபோது வீட்டில் இருந்த பித்தளை அண்டா உள்ளிட்ட பொருட்கள் திருட்டு போயிருந்ததை கண்டு பழனிசாமியின் மகன்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் மருதை வீட்டில் இல்லை. இதனால் அவர் மீது சந்தேகம் ஏற்பட்டதையடுத்து, அவரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர் பொருட்களை முட்புதரில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து துவரங்குறிச்சி போலீசில் பழனிசாமி அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மருதையை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்