திருவாரூர்
மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபர் கைது
|நன்னிலம் அருகே மோட்டார் சைக்கிள்கள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
நன்னிலம்:
நன்னிலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன் மற்றும் போலீசார் நன்னிலம் அருகே உள்ள முடிகொண்டான் திருமல்ராஜன் ஆற்றுப்பாலம் முன்பு வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர் அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த ஒருவரை மறித்து விசாரணை செய்தனர். அப்போது அந்த நபர் முன்னுக்கு பின் முரணாக பதில் அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த போலீசார் அவரிடம் மேலும் விசாரணை நடத்தினர். இதில் அவர் காரைக்கால் காக்கா மொழி கீழத்தெரு பகுதியை சேர்ந்த பாஸ்கர் (வயது28) என்பதும், இவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள் திருடியதும் தெரிய வந்தது. மேலும் இவர், கடந்த 4 மாதங்களுக்கு முன்பு நன்னிலம், சன்னாநல்லூர் மற்றும் ஸ்ரீகண்டபுரம் ஆகிய பகுதிகளில் மோட்டார் சைக்கிள்களை திருடியதும் தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து பாஸ்கரை கைது செய்து அவரிடம் இருந்து 3 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.