< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
வாகனம் நிறுத்தும் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபர் கைது
|6 April 2023 12:59 PM IST
திருவொற்றியூரில் வாகனம் நிறுத்தும் பகுதியில் மோட்டார் சைக்கிளை திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவொற்றியூர் கார்க்கில் நகரை சேர்ந்தவர் மணிவேல் (வயது 40). இவர் தனியார் கம்பெனியில் ஆபரேட்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு இவர் வேலை செய்யும் கம்பெனியின் உள்ள வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு வேலைக்கு சென்றார். பின்பு மறுநாள் காலை வேலை முடித்துவிட்டு வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிள் காணவில்லை.
இது குறித்து சாத்தாங்காடு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக போலீசார் திருட்டில் ஈடுபட்ட நபரை தேடி வந்தனர்.
இந்தலையில் மணலி எட்டியப்பன் தெருவை சேர்ந்த ஜோதீஸ்வரன் (20) என்பவர்தான் மணிவேலின் மோட் டார்சைக்கிளை திருடியது தெரிய வந்தது. அவரை கைது செய்த போலீசார், மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.