திருப்பத்தூர்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
|ஜோலார்பேட்டை அருகே மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
ஜோலார்பேட்டையை அடுத்த தாமலேரிமுத்தூர் மேம்பாலம் அருகே திருப்பத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார் உத்தரவின் பேரில் ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன், குற்றப்பிரிவு சப்- இன்ஸ்பெக்டர் அஜித் மற்றும் சவுந்தர பாண்டியன், சுதாகர் உள்ளிட்ட போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது திருப்பத்தூரில் இருந்து வாணியம்பாடி நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கி விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது அவர் முன்னுக்குபின் முரணாக பதில்கூறியதால் மோட்டார் சைக்கிளின் ஆர்.சி.புக் உள்ளிட்ட ஆவணங்களை கேட்டுள்ளனர். உடனே அவர் தான் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிள் திருடி வந்தது என போலீசாரிடம் கூறி உள்ளார்.
அவரை போலீசார் கைது செய்து வி்சாரித்ததில் வர் திருப்பத்தூரை அடுத்த கோனேரிகுப்பம் அருகே உள்ள சமத்துவபுரம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் என்பவரின் மகன் பாலாஜி (வயது 21) என்பது தெரிய வந்தது.
மேலும் இவர் மூன்று மோட்டார் சைக்கிள் திருடியதாகவும், அதில் இரண்டை விற்றுவிட்டதாகவும் தெரிவித்துள்ளார். அதன்பேரில் 3 மோட்டார் சைக்கிள்களையும் மீட்டனர். இவர் நாட்டறம்பள்ளி போலீசாரால் வழிபறி வழக்கில் கைதாகி சிறை சென்று வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.