< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
7 May 2023 1:37 AM IST

பேட்டையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

பேட்டை:

பேட்டை சேரன்மாதேவி ரோடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சமீர் (வயது 20). இவர் தனது வீட்டு வாசலில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி இருந்தார். பின்னர் வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இது குறித்து பேட்டை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் வள்ளியம்மாள் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். இந்த நிலையில் மோட்டார் சைக்கிளை திருடியது ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த ராஜேஷ் ராம் (30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து, மோட்டார் சைக்கிளை மீட்டனர்.

மேலும் செய்திகள்