< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
4 May 2023 1:28 AM IST

நெல்லையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

நெல்லை சந்திப்பு சி.என். கிராமம் பகுதியில் மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து நெல்லை சந்திப்பு போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மோகன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தார். அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து நடத்திய விசாரணையில் கன்னியாகுமரி மாவட்டம் மார்த்தாண்டத்தைச்சேர்ந்த பிரிஜீத் (வயது 27) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றது தெரியவந்தது.

இந்த நிலையில் இன்ஸ்பெக்டர் ரமேஷ்மோகன் தலைமையிலான போலீசார் நேற்று மார்த்தாண்டம் சென்று பிரிஜீத்தை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்