< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
6 Feb 2023 12:40 AM IST

திசையன்விளையில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

திசையன்விளை:

திசையன்விளை வெற்றிவிளை ரோடு பகுதியை சேர்ந்தவர் பொன் செல்வன். இவர் திசையன்விளை வடக்கு பஜாரில் டிராவல்ஸ் நடத்தி வருகிறார். டிராவல்ஸ் முன்பு நிறுத்தி இருந்த இவரது மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர் திருடி சென்றுவிட்டதாக திசையன்விளை போலீசில் புகார் செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் வழக்குப்பதிவு செய்து சம்பவம் நடந்த இடத்தில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தார். அதில் திசையன்விளையை அடுத்த அந்தோணியார்புரம் வடக்கு தெருவை சேர்ந்த தனசிங் (வயது 31) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது தெரியவந்தது. போலீசார் அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்