திருநெல்வேலி
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
|வள்ளியூரில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
வள்ளியூர் தெற்கு:
வள்ளியூர் நாயக்கர் தெருவை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் உலகநாதன் (வயது 45). இவருக்கு வள்ளியூர் ெரயில் நிலையம் அருகில் சொந்த வயல் உள்ளது. கடந்த 14-ந் தேதி மோட்டார் சைக்கிளில் வயலுக்கு சென்றார். அங்கு தோட்டத்தின் முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதுபற்றிய புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
இந்தநிலையில் நேற்று வள்ளியூர் சப்-இன்ஸ்ெபக்டர் சகாயராபின் சாலு தலைமையில் கோட்டையடி பகுதியில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த நபரை பிடித்து விசாரித்ததில், கோலியன்குளம் சங்கரன் மகன் பேச்சிமுத்து (24) என்பதும், உலகநாதனின் மோட்டார் சைக்கிளை திருடிச் சென்றதும் தெரியவந்தது. இதையடுத்து பேச்சிமுத்துவை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மோட்டார் சைக்கிளை மீட்டனர்.