< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
தூத்துக்குடி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
3 Sept 2022 4:31 PM IST

தூத்துக்குடியில் மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

தூத்துக்குடி திரேஸ்புரத்தை சேர்ந்த மெல்டஸ் மகன் விமல் (வயது 36) என்பவர் தனது மோட்டார் சைக்கிளை கடந்த மாதம் 26-ந்தேதி லூர்தம்மாள்புரம் பகுதியில் நிறுத்தி வைத்திருந்தபோது திருடு போனது. இதேபோல் கடந்த மாதம் 30-ந்தேதி தூத்துக்குடி ஜான் சேவியர் நகர் பகுதியைச் சேர்ந்த ஸ்டீபன் மகன் டைசனின் (29) மோட்டார் சைக்கிள் அவரது வீட்டின் முன்பு நிறுத்தியிருந்தபோது காணாமல் போனது.

இதுகுறித்து விமல் மற்றும் டைசன் ஆகியோர் அளித்த புகாரின் பேரில் தாளமுத்துநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், தூத்துக்குடி சுனாமி காலனியை சேர்ந்த செட்டி பெருமாள் மகன் கர்ணன் (22) என்பவர் 2 மோட்டார் சைக்கிள்களையும் திருடியது தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் கர்ணனை கைது செய்து, 2 மோட்டார் சைக்கிள்களையும் பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்