< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
22 July 2022 1:13 AM IST

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

ஏர்வாடி:

திருக்குறுங்குடி நம்பிதோப்பை சேர்ந்தவர் ராஜ் (வயது 38). சம்பவத்தன்று இரவில் இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி இருந்தார். நள்ளிரவில் மர்ம நபர் மோட்டார் சைக்கிள், வீட்டில் இருந்த செல்போன்களை திருடி சென்று விட்டார். இதுகுறித்து ராஜ் திருக்குறுங்குடி போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். இதில் கடையத்தை சேர்ந்த மகேஷ் (19) என்பவர் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து மகேஷை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து திருடப்பட்ட மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

மேலும் செய்திகள்