< Back
மாநில செய்திகள்
மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது
திருநெல்வேலி
மாநில செய்திகள்

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
10 Sept 2023 1:05 AM IST

மோட்டார் சைக்கிள் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

வள்ளியூர்:

நாங்குநேரி தெற்கு தெருவை சேர்ந்தவர் பால்துரை (வயது 33). இவரது மோட்டார் சைக்கிளை மர்மநபர் திருடிச் சென்றார். இதுகுறித்த புகாரின் பேரில் வள்ளியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அதில் நம்பிதலைவன் பட்டயம் மேலத் தெருவை சேர்ந்த மணிகண்டன் (30) என்பவர் மோட்டார் சைக்கிளை திருடி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதையடுத்து போலீசார், அவரை கைது செய்து மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

மேலும் செய்திகள்