< Back
மாநில செய்திகள்
மொபட் திருடிய வாலிபர் கைது
கரூர்
மாநில செய்திகள்

மொபட் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
4 Sept 2023 12:30 AM IST

மொபட் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டனர்.

கரூர் அருகே உள்ள புலியூர் கவுண்டம்பாளையத்தை சேர்ந்தவர் மகேந்திரகுமார் (வயது 32). இவர் தனது மொபட்டை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு நிறுத்தி வைத்திருந்தார். அந்த மொபட்டை பசுபதிபாளையத்தை சேர்ந்த மோகன்ராஜ் (23) என்பவர் திருடி சென்று விட்டார். இதுகுறித்து மகேந்திரகுமார் கொடுத்த புகாரின்பேரில், பசுபதிபாளையம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பானுமதி வழக்குப்பதிந்து, மோகன்ராஜை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றார்.

மேலும் செய்திகள்