< Back
மாநில செய்திகள்
ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது
திருப்பத்தூர்
மாநில செய்திகள்

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர் கைது

தினத்தந்தி
|
7 Oct 2022 6:14 PM GMT

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

ஜோலார்பேட்டை,

ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

மங்களூரு எக்ஸ்பிரஸ்

கர்நாடக மாநிலம் மங்களூரு ரெயில் நிலையத்தில் இருந்து சென்னை செல்லும் மங்களூரு எக்ஸ்பிரஸ் ரெயிலில் மேற்கு வங்காள மாநிலம் குஜஸ்ட்ரம்பூர் பகுதியை சேர்ந்த நஞ்புல் சேக் என்பவரின் மகன் அனில் சேக் (வயது 27) கடந்த 6-ந்தேதி கண்ணூர் ெரயில் நிலையத்தில் இருந்து பொதுப்பெட்டியில் பயணம் செய்தார். அந்த ரெயில் அதிகாலை 2 மணி அளவில் ஜோலார்பேட்டை ரெயில் நிலையம் 2-வது பிளாட்பாரத்தில் வந்து நின்றது.

அப்போது அனில்சேக் குடிநீர் பாட்டில் வாங்குவதற்காக ரெயிலில் இருந்து இறங்கினார். குடிநீர் பாட்டில் வாங்கியபின்னர் பிளாட்பாரத்தில் அவர் நின்று கொண்டிருந்த போது அவர் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென மாயமானதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதுகுறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் ரெயில்வே போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்போன் திருடிய மர்ம நபரை தேடி வந்தனர்.

வாலிபர் கைது

இந்த நிலையில் நேற்று ஜோலார்பேட்டை ரெயில் நிலையத்தில் உள்ள 1-வது பிளாட்பாரத்தில் ரெயில்வே சப்-இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சந்தேகத்தின் பேரில் நின்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்ததில் முன்னுக்குப் பின் முரணாக பதில் கூறினார்.

இதில் சந்தேகம் அடைந்த ரெயில்வே போலீசார் அவரை ரெயில்வே போலீஸ் நிலையத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டதில் அவர் சேலம் மாவட்டம் ஏர்வாடியை அடுத்த நங்கியான் காடு பகுதியை சேர்ந்த சுரேஷ் என்பவரின் மகன் ஜீவா என்கிற விக்கி (வயது 23) என்பதும், அனில் சேக்கிடம் செல்போனை திருடியதும் தெரிய வந்தது.

இதனை எடுத்து ஜீவா என்கிற விக்கியை ரெயில்வே போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து செல்போனை பறிமுதல் செய்தனர். பின்னர் அவரை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

மேலும் செய்திகள்