< Back
மாநில செய்திகள்
பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது
அரியலூர்
மாநில செய்திகள்

பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
1 Oct 2023 12:15 AM IST

பெண்ணிடம் சங்கிலி பறித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

அரியலூர் மாவட்டம் திருமானூரை அடுத்த முடிகொண்டான் கிராமத்தை சேர்ந்தவர் முத்தமிழ் செல்வன். இவருடைய மனைவி மகாலட்சுமி. இவர் கடந்த 18-ந் தேதி இரவு வீட்டின் அருகே உள்ள மாட்டு கொட்டகையில், மாடுகளுக்கு தீவனம் வைக்க சென்றார். அப்போது அங்கு மறைந்து இருந்த மர்ம நபர் மகாலட்சுமி அணிந்திருந்த 7 பவுன் தாலி சங்கிலியை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதுகுறித்து திருமானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற மர்ம ஆசாமியை தேடி வந்தனர்.

இந்தநிலையில் பெரம்பலூர் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தை சேர்ந்த விஜயகுமார் (38) என்பவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து 5 சவரன் நகைகளை பறிமுதல் செய்தனர். மேலும் இவர் திருமானூர் போலீஸ் சரகத்தில் மேலும் பல திருட்டு வழக்குகளில் தொடர்புடையவர் என்பதும் தெரியவந்துள்ளது. பின்னர் அவர் அரியலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்