< Back
மாநில செய்திகள்
மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது
விழுப்புரம்
மாநில செய்திகள்

மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபர் கைது

தினத்தந்தி
|
18 March 2023 12:24 AM IST

திண்டிவனம் அருகே மனைவிக்கு தெரியாமல் 2-வது திருமணம் செய்த வாலிபார் கைது செய்யப்பட்டார்.

திண்டிவனம்,

விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அடுத்த மரக்காணம் அருகே உள்ள கொளத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் பொய்யாது மகள் சத்யா (வயது 29). இவரும் அதே பகுதியை சேர்ந்த துரை மகன் சிவக்குமார்(25) என்பவரும் காதலித்து கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களது திருமணத்துக்கு சிவக்குமாரின் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து சிவக்குமார் தனது காதல் மனைவி சத்யாவுடன் சென்னையில் குடும்பம் நடத்தி வந்தார். அப்போது கணவன்-மனைவி இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து சிவக்குமார் சத்யாவிடம் இருந்து விவாகரத்து கேட்டு விழுப்புரம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சிவக்குமாருக்கு அவருடைய பெற்றோர் கடலூர் மாவட்டம் சிதம்பரம் பகுதியை சேர்ந்த மெர்சி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து வைத்துள்ளனர். சிவக்குமார்-மெர்சி தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்துள்ளது. இதுபற்றி அறிந்த சத்யா தனக்கு தொியாமல் 2-வது திருமணம் செய்த சிவக்குமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி திண்டிவனம் அனைத்து மகளிா் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் சிவக்குமார் மற்றும் அவா் திருமணம் செய்ய உடந்தையாக இருந்த துரை, தாய் வசந்தா, மெர்சி உள்ளிட்ட 6 பேர் மீது வழக்குப்பதிந்து, சிவக்குமாரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்