< Back
மாநில செய்திகள்
சென்னை
மாநில செய்திகள்
வளசரவாக்கத்தில் பெண்கள் விடுதிக்குள் எட்டிப்பார்த்த வாலிபர் கைது
|1 Nov 2022 1:47 PM IST
வளசரவாக்கத்தில் பெண்கள் விடுதிக்குள் எட்டிப்பார்த்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
சென்னை வளசரவாக்கம், ஆற்காடு சாலையில் இயங்கி வரும் தனியார் பெண்கள் விடுதியில் நேற்று முன்தினம் இரவு வாலிபர் ஒருவர் எட்டி பார்ப்பதாக, அங்கு தங்கி இருந்த பெண்கள் புகார் அளித்தனர். அதன்பேரில் வளசரவாக்கம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று அங்கிருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் விடுதி அருகிலேயே செயல்பட்டு வரும் பிரியாணி கடையில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தை சேர்ந்த சர்க்காரியா அகமது லஸ்கர் (வயது 24) என்பவர் விடுதியில் தங்கி உள்ள பெண்களின் அறையை எட்டிப்பார்த்தது தெரியவந்தது. அவரை போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.