< Back
மாநில செய்திகள்
திருவள்ளூர்
மாநில செய்திகள்
சிறுமியை திருமணம் செய்த வாலிபர் கைது
|24 Sept 2023 6:09 PM IST
சிறுமியை திருமணம் செய்த வாலிபரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
திருவள்ளூர் அடுத்த பேரம்பாக்கம் பகுதியை சேர்ந்த 16 வயது சிறுமியை அவரது தாயார் ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தை சேர்ந்த நாகராஜன் (வயது 32) என்பவருக்கு கட்டாய திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் சிறுமியை கட்டாயப்படுத்தி குழந்தை திருமணம் செய்து வைத்த தகவலை சிறுமியின் உறவினர் ஒருவர் சைல்டு லைன் 1098 எண்ணுக்கு தகவல் கொடுத்தார்.
அதைத் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரி பத்மாவதி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை செய்து இதுகுறித்து திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் திருவள்ளூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பரிபூரணம் சிறுமியை கட்டாய திருமணம் செய்த நாகராஜன் மற்றும் சிறுமியின் தாயார் ஆகிய இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்.